மிட்டாய் கவிதைகள்!

தாயவள் எழுதுகிறாள்!

April 13, 2014

o INDIA MOTHERS facebook

நேரிலே கண்டதில்லை புரியும்படி பேசியதில்லை,
பிறப்பையும் பிரிவென்ற உன்கண்ணீரில் சிரித்தேன்!

நிலவினைப் பார்த்து நீயுண்ணும் அழகிலே,
உன்னைப் பார்த்து நானுண்டேன் நிலவே!

தத்தித்தத்தி தவழ்ந்தும் நடந்தும் அழகாய்உந்தன்
கன்னக்குழியில் ஆயிரம் முத்தங்கள் அழகாக்கினேன்!

வெங்கதிரில் கண்மணியாய் இமையெனக் காத்தேன்,
வெண்ணிலவில் பொன்மணியாய் இமைக்காமல் பார்த்தேன்!

பேசிய முதற்சொல்லே அம்மா என்றபோது
பேச்சில்லை சிலநேரம் உன்கொஞ்சும் பேச்சாலே!

பள்ளிகூட மணியோசை எதிர்பார்க்கும் உனைப்போல,
கொஞ்சம் தூரந்தள்ளி நானும்எதிர் பார்த்திருந்தேன்!

- என்றும் காதலுடன்…


எழுத்தாளர்: எம்.ஆர்.கார்த்திக்